கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ‘காலர் டியூன்’ - மத்திய அரசு உத்தரவின் பேரில் செல்போன் நிறுவனங்கள் நடவடிக்கை


கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ‘காலர் டியூன்’ - மத்திய அரசு உத்தரவின் பேரில் செல்போன் நிறுவனங்கள் நடவடிக்கை
x
தினத்தந்தி 10 March 2020 5:15 AM IST (Updated: 10 March 2020 5:13 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து செல்போன் நிறுவனங்களும் ‘கொரோனா’ விழிப்புணர்வு செய்தியை ‘காலர் டியூனாக’ வடிவமைத்து உள்ளது.

சென்னை, 

சீனாவில் பல பேரின் உயிரை காவு வாங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நுழைந்து உள்ளது. இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும், மக்களிடம் தீவிர விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் நாட்டில் உள்ள அனைவரின் கையிலும் செல்போன் தவழ்கிறது. இதனால் ‘காலர் டியூன்’ மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்து, செல்போன் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

அதன்பேரில், அனைத்து செல்போன் நிறுவனங்களும் 30 நொடிகள் ஆங்கிலத்தில் ‘கொரோனா’ விழிப்புணர்வு செய்தியை ‘காலர் டியூனாக’ வடிவமைத்து உள்ளது. அதன்படி, செல்போனில் ஒருவரை தொடர்பு கொள்ளும்போது, ‘இருமல் சத்தத்துடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்தி ‘காலர் டியூனாக’ வாடிக்கையாளர்கள் செவிக்கு சென்றடைகிறது.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் செல்போன் நிறுவனத்துக்கு மாதந்தோறும் கட்டணம் செலுத்தி தங்களுக்கு பிடித்தமான திரைப்பட பாடல்களை ‘காலர் டியூனாக’ வைத்திருந்தனர். தற்போது அனைவரின் செல்போன் காலர் டியூன்களும், கொரோனா விழிப்புணர்வாக மாறி உள்ளது.
1 More update

Next Story