நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை,
ராஜீவ்காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதிகளான நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவை கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு ஒப்புதல் கேட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த பரிந்துரை மீது கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்த சூழலில், சட்டவிரோத காவலில் உள்ள தன்னை விடுவிக்க வேண்டும் என்று நளினி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களுக்கும் பிறகு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த நிலையில், நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story