சர்வதேச சந்தை விலை வீழ்ச்சிக்கு ஏற்ப பெட்ரோல் விலை குறைக்கப்பட வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்


சர்வதேச சந்தை விலை வீழ்ச்சிக்கு ஏற்ப பெட்ரோல் விலை குறைக்கப்பட வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 March 2020 12:52 AM GMT (Updated: 15 March 2020 12:52 AM GMT)

சர்வதேச சந்தை விலை வீழ்ச்சிக்கு ஏற்ப பெட்ரோல் விலை குறைக்கப்பட வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் வலியுறுதியுள்ளார்.

சென்னை, 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து இருக்கும் போது, அதே விகிதாச்சாரத்தின்படி பெட்ரோலிய பொருட்களின் விலைகளை குறைப்பதே மக்களுக்கு நலன் பயக்கும். 

நடைமுறையில் பெட்ரோலிய பொருட்களின் விலைகள் குறைந்து வருவது வரவேற்கத்தக்கது என்றாலும், கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பங்குச்சந்தையின் வீழ்ச்சி என்பது இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கச் செய்வதாகும். எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பங்குச்சந்தையை நிலைப்படுத்தி முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story