சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் இன்று ஆலோசனை


சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 23 March 2020 2:47 AM GMT (Updated: 23 March 2020 2:47 AM GMT)

சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. மென்பொருள் நிறுவனங் கள், தங்கள் ஊழியர் களை வீடுகளில் இருந்து வேலை செய்ய அனுமதித்து இருக்கின்றன.

கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்றது. நாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி வரை பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அண்டை மாநில எல்லைகள் ‘சீல்’ வைக்கப்பட்டு, அந்த மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்கள் உள்பட இந்தியா முழுவதும் 80 மாவட்டங்களை தனிமைப் படுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கி இருக்கிறது. தனிமைப்படுத்தப்பட வேண்டிய  மாவட்டங்களின் பட்டியலில் தமிழகத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், மேற்கூறிய 3 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். காணொலி காட்சி மூலம் காலை 9.30 மணியளவில், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில்  இருந்தபடி ஆலோசனை நடத்த உள்ளார்.


Next Story