மாநில செய்திகள்

சென்னையில் நாளை முதல் இறைச்சி கடைகளை மூட உத்தரவு; கொரானா அதிகம் பாதிப்புள்ள பகுதி + "||" + Corona is the most affected area; Meat shops in Chennai to be closed tomorrow

சென்னையில் நாளை முதல் இறைச்சி கடைகளை மூட உத்தரவு; கொரானா அதிகம் பாதிப்புள்ள பகுதி

சென்னையில் நாளை முதல்  இறைச்சி கடைகளை மூட உத்தரவு; கொரானா அதிகம் பாதிப்புள்ள பகுதி
சென்னையில் நாளை முதல் இறைச்சி கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளது மேலும் கொரானா அதிகம் பாதிப்புள்ள பகுதியை வெளியிட்டு உள்ளது.

சென்னை

நாளை முதல் சென்னையில் அனைத்து வகையான இறைச்சி கடைகளையும் மூட மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.

உத்தரவை மீறி செயல்படும் இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.

 சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளின் பட்டியலை, மண்டல வாரியாக பெருநகர மாநகராட்சி வெளியிட்டிருக்கிறது. 

ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பிராட்வே, ராயபுரம், புதுப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அரும்பாக்கம், அண்ணா நகர், அமைந்தகரை, புரசைவாக்கம் பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட சைதாப்பேட்டை, மாம்பலம் ஆகிய இடங்களில் 6 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டையில் 5 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட சாந்தோம், கோடம்பாக்கத்தில் 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக, சென்னை மாநகராட்சி பட்டியலிட்டு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அம்மா உணவகங்களில் வரும் 17 ஆம் தேதி வரை இலவச உணவு -சென்னை மாநகராட்சி அறிவிப்பு
அம்மா உணவகங்களில் வரும் 17 ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
2. சென்னை மாநகராட்சியில் போர்க்கால அடிப்படையில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை - டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி
சென்னை மாநகராட்சியில் போர்க்கால அடிப்படையில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கொரோனா நோய்த்தடுப்பு சிறப்பு அலுவலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
3. சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவுக்கு காரணம் என்ன?- முழுத்தகவல்
சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவுக்கு காரணம் என்ன என்பதை பார்க்கலாம்
4. "இறந்தவர்களின் சடலத்திலிருந்து நோய் பரவாது"- சென்னை மாநகராட்சி
இறந்தவர்களின் சடலத்திலிருந்து நோய் பரவாது. எனவே அச்சமும், கவலையும் தேவையில்லை” என்று சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
5. சென்னையில் இன்று மாலை 6 மணி முதல் டீக்கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் உத்தரவு
சென்னையில் இன்று மாலை 6 மணி முதல் டீக்கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.