மின் கட்டணம் செலுத்த மே 22 - ஆம் தேதி வரை அவகாசம்- தமிழக அரசு


மின் கட்டணம் செலுத்த மே 22 - ஆம் தேதி வரை அவகாசம்- தமிழக அரசு
x
தினத்தந்தி 5 May 2020 9:13 AM GMT (Updated: 5 May 2020 9:51 AM GMT)

மின் கட்டணம் செலுத்த மே 22 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மின் கட்டணத்தை செலுத்த  மே 6 ஆம் தேதி வரை தமிழ்நாடு மின்சார வாரியம் அவகாசம் அளித்திருந்தது. மேலும், மின்கட்டணக் கவுண்டர்களுக்கு வருவதைத் தவிர்க்கும் வகையில், ஏற்கெனவே பயனீட்டாளா்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கிடையே, ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.   

இந்த நிலையில், தாழ்வழுத்த மின் கட்டணம் செலுத்த மே 22 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

 மார்ச் 25- முதல் உள்ள தொகையை தாமத கட்டணம் மறு மின் இணைப்பு கட்டணமின்றி கட்டலாம் என்று தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.  முன்னதாக, மே 18 ஆம் தேதி வரை மின் கட்டணம் வசூலிக்க சென்னை ஐகோர்ட் இடைக்கால  தடை விதித்தது. 

Next Story