ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்கும் பணி தீவிரம்; தமிழக அரசு அறிவிப்பு


ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்கும் பணி தீவிரம்; தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 6 May 2020 10:03 AM IST (Updated: 6 May 2020 10:03 AM IST)
t-max-icont-min-icon

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்கும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

சென்னை,

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரிடப்பட்ட பங்களா வீட்டில் தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதா வாழ்ந்து வந்தார்.  அவரது மறைவுக்கு பின், அதனை நினைவு இல்லம் ஆக மாற்றும் பணி தீவிரமடைந்து உள்ளது.  இதன் ஒரு பகுதியாக நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

சென்னை போயஸ் கார்டன் பகுதியை சேர்ந்த மக்களிடம் இதுபற்றி கேட்டறிந்த பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

Next Story