நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு


நாம் தமிழர் கட்சி  தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் மீது  தேசத்துரோக வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 9 May 2020 9:09 AM GMT (Updated: 9 May 2020 9:26 AM GMT)

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை, 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்திருந்த சமயத்தில், கோவை ஆத்துப்பாலத்தில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி  நடைபெற்ற போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

சீமானின் பேச்சு ஆட்சேபகரமாக இருப்பதாகக் கூறி அவர் மீது கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி சீமான் பேசியதற்காக 75 நாட்கள் கடந்த நிலையில் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சீமான் மீது 124 (ஏ) தேசத்துரோக வழக்கு , 153(ஏ) இரு பிரிவினருக்கிடையே விரோத உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய இரு பிரிவுகளில் குனியமுத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Next Story