பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு குழு அமைப்பு
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கநாதன் தலைமையில் 24 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
சென்னை,
கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் 46 -வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து எவ்வாறு மீள்வது என்பது குறித்து இந்தக் குழு அறிக்கை அளிக்கும். மேற்கூறிய உயர்நிலைக்குழு பல்வேறு பரிந்துரைகளை மூன்று மாதத்திற்குள் தமிழக அரசிடம் சமர்பிக்க உள்ளது. இந்த உயர்நிலைக்குழுவில், பொருளாதார வல்லுநர்கள், தொழில் துறையினர், யுனிசெப் உறுப்பினர்கள் என 24 பேர் இடம்பெற்றுள்ளனர்.
Related Tags :
Next Story