மாநில செய்திகள்

ஒரு மதுக்கடையில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே- டாஸ்மாக் நிர்வாகம் + "||" + 500 tokens per day in TASMAC

ஒரு மதுக்கடையில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே- டாஸ்மாக் நிர்வாகம்

ஒரு மதுக்கடையில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே- டாஸ்மாக் நிர்வாகம்
தமிழகத்தில் மதுபானக்கடைகள் நாளை முதல் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை,

ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை  திறக்க தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு  உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, மதுபானக்கடைகளை திறப்பதற்கு இருந்த சட்டத்த தடைகள் விலகியது.

இதன்படி,  தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்படும் என்று  டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில வாணிப கழகம்  வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

உச்ச நீதிமன்ற ஆணையைத் தொடர்ந்து, மதுபானக் கடைகள் நாளை முதல் திறக்கப்படும். பெருநகர சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர்  மாவட்டம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபானக்கடைகள் திறக்கப்படாது. மேலும், மால்கள் வணிக வளாகங்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் இக்கடைகள் இயங்காது. 

மதுபானக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். கடைக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு
தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
2. ஜல்லிக்கட்டின் போது காளைகள்‘மரணம்’ விலங்கு நல அமைப்பு தமிழக அரசுக்கு கடிதம்
ஜல்லிக்கட்டு ஆய்வு அறிக்கையின் மீதான பதில்களை விரைவாக வழங்குமாறு தமிழக அரசை இந்திய விலங்குகள் நல வாரியம் கேட்டு கொண்டுள்ளது
3. ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு- தமிழக அரசு
ஜி எஸ் டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் ஜுன் 30 உடன் நிறைவடைந்த நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
4. அதிக விலைக்கு மது விற்ற9,319 ஊழியர்கள் மீது நடவடிக்கை ஐகோர்ட்டில் ‘டாஸ்மாக்’ நிர்வாக இயக்குனர் தகவல்
அதிக விலைக்கு மது விற்பனை செய்ததாக கடந்த ஆண்டு 9,319 டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் ‘டாஸ்மாக்’ நிர்வாக இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
5. டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தமிழக அரசு நடவடிக்கை
டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.