மாநில செய்திகள்

ஜூன் 1 முதல் இயக்கப்பட உள்ள ரெயில்களுக்கான அட்டவணை வெளியீடு - தமிழகத்திற்கு ரெயில்கள் இல்லை + "||" + IRCTC Latest News: Railways Releases List of 200 Trains to Run From June 1, Booking to Begin From Today at 10 AM

ஜூன் 1 முதல் இயக்கப்பட உள்ள ரெயில்களுக்கான அட்டவணை வெளியீடு - தமிழகத்திற்கு ரெயில்கள் இல்லை

ஜூன் 1 முதல் இயக்கப்பட உள்ள ரெயில்களுக்கான அட்டவணை வெளியீடு - தமிழகத்திற்கு ரெயில்கள் இல்லை
ஜூன் 1 முதல் இயக்கப்பட உள்ள ரெயில்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டது. இதனால், ரெயில், பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது, புலம் பெயர் தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரெயில்களை நாடு முழுவதும் ரெயில்வே இயக்கி வருகிறது. 

இந்த நிலையில்,  ஜூன் ஒன்றாம் தேதி முதல் வழக்கத்தில் உள்ள கால அட்டவணைப்படி ஏசி அல்லாத ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அண்மையில் தெரிவித்தார்.  அதன்படி ஏசி வசதி இல்லாத, தேர்வு செய்யப்பட்ட 200 ரயில்களை நாடு முழுவதும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஜூன் 1 தேதி முதல் இயக்கப்படவுள்ள 200 ரயில்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த 200 ரயில்களுக்கான இணையதள டிக்கெட் முன்பதிவு மே 21 முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் தமிழகத்திற்கு ரெயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

இந்த ரெயில்களில் ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்யப்படும். ஆர்.ஏ.சி, காத்திருப்போர் பட்டியலுக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும். எனினும், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் ரெயில்களில் பயணம் செய்ய எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ரெயில்வே தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா குறைய அரசு நடவடிக்கை; முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா குறைய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
2. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை-தமிழக அரசு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
3. திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு
திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது.
4. தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
5. அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று ;அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு கொரோனா பரிசோதனை
அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.