மாநில செய்திகள்

திருச்செந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் மரணம் + "||" + Former MLA of Thiruchendur SR Subramanian Adityan died

திருச்செந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் மரணம்

திருச்செந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் மரணம்
திருச்செந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். திருச்செந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.
திருச்செந்தூர், 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழியைச் சேர்ந்தவர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் (வயது 73). முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலையில் உயிரிழந்தார். இவருக்கு விஜய அன்புபாய் ஆதித்தன் என்ற மனைவியும், எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், எஸ்.ஆர்.எஸ்.தனஞ்செய ஆதித்தன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவராக உள்ளார்.

கடந்த 1984-ம் ஆண்டு முதல் 1989 வரை திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்காராகவும், நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவராகவும் இருந்தவர். மேலும் திருச்செந்தூர் நிலவள வங்கியின் தலைவராகவும், திருச்செந்தூர் நகர கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் திறம்பட பணியாற்றினார்.

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மீது பற்று கொண்ட எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், தூத்துக்குடி மாவட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவராகவும், மாநில நிர்வாகக்குழு உறுப்பினராகவும் இருந்தார். மேலும் காயாமொழி சி.பா.ஆதித்தனார் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவராகவும் பணியாற்றினார். எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தனின் உடல் அடக்கம், அவரது சொந்த ஊரான காயாமொழியில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 3 மணிக்கு நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
2. சாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி பதிவு பொறுப்பு காவலரிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை
திருச்செந்தூரில் சாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி பதிவு பொறுப்பு காவலரிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார்.
3. திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.
4. திருச்செந்தூர், குலசேகரன்பட்டினத்தில் 3 ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்கள் கனிமொழி எம்.பி. வழங்கினார்
திருச்செந்தூர், குலசேகரன்பட்டினத்தில் 3 ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்களை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
5. திருச்செந்தூரில் வீட்டில் தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் சாவு - கழுத்து இறுகியதால் பரிதாபம்
திருச்செந்தூரில் வீட்டில் தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் இறந்தான். அவனது கழுத்தை சேலை இறுக்கியதால் இந்த பரிதாப சம்பவம் நடந்தது.