சென்னையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள யாருக்கும் அனுமதியில்லை -சென்னை மாநகராட்சி


சென்னையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள யாருக்கும் அனுமதியில்லை -சென்னை மாநகராட்சி
x
தினத்தந்தி 26 Jun 2020 5:40 AM GMT (Updated: 26 Jun 2020 5:40 AM GMT)

சென்னையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள யாருக்கும் அனுமதியில்லை என மாநகராட்சி ஆணையர் கூறி உள்ளார்.

சென்னை

சென்னை மாநகராட்சி சார்பாக சைதாப்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதனை ஆய்வு செய்தபின் 

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:-

 சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம் நாள்தோறும், கையுறைகளை வாரந்தோறும் புதிதாக அளிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவும் நிலையில் இ-பாஸ், முறையாக பெறுவது அவசியம் என கேட்டுக்கொண்ட அவர், கைகளால் எழுதி தரும் இ-பாசோ, தனியாரிடம் பெறும் இ-பாசோ செல்லாது என தெளிவுப்படுத்தியுள்ளார். கியூஆர் கோடு இன்றி போலி இ-பாஸ் தருபவர்கள் குறித்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள யாருக்கும் அனுமதியில்லை என கூறினார்.

Next Story