மாநில செய்திகள்

செஞ்சி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + senji DMK MLA Mastan confirmed corona infection

செஞ்சி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி

செஞ்சி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி
செஞ்சி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம், 

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 5,29,893 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 16,112 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் செஞ்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ கே.எஸ்.மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, அவருக்கு கோவை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் செய்யூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.அரசும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.