மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு + "||" + Curfew extended throughout Tamil Nadu till July 31 - Chief Minister Edappadi Palanisamy announces

தமிழகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை, 

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2,212 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனால் இந்த எண்ணிக்கை 47,749 ஆக உயர்ந்துள்ளது. 37,331 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் ஒரே நாளில் 2,167 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55,969 ஆக உயர்ந்துள்ளது.  

இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  

இதன்படி,  சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போதுள்ள முழு ஊரடங்கு ஜூலை 5ம் தேதி வரை தொடரும்

* ஜூலை 5 ஆம் தேதி முதல் 4 ஞாயிற்றுகிழமைகளில் எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்

* மதுரை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 5ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்

* மாவட்டங்களுக்குள் தனியார் மற்றும் அரசுப் போக்குவரத்து ஜூலை 1 - ஜூலை 15 வரை தற்காலிகமாக நிறுத்தம்

* மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி தரிசனம் அனுமதிக்கப்படாது

* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த வித தளர்வும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்

* மதம் சார்ந்த வழிபாடுகள், சுற்றுலா தலங்களுக்கு தடை நீட்டிப்பு

* சென்னை மாநகராட்சி, மற்ற மாநகராட்சிகள், கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் அனுமதிபெற்று இறைச்சி கடைகள் செயல்படலாம்

* திருமணம், இறுதிசடங்குகளில் 50 பேர் வரை பங்கேற்க அனுமதி

* பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கு தடை தொடரும் என்றும், ஆன்லைன் கல்விக்கு தடையில்லை என்றும், மாவட்டம், மாநிலங்களுக்கு இடையே இ-பாஸ் நடைமுறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்டுப்பாடுகள் தளர்வுகள் குறித்த விவரம்:-
தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் போலீசாருக்கு மனநல பயிற்சி - டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு
தமிழகம் முழுவதும் போலீசாருக்கு அறிவுபூர்வமான மனநல பயிற்சி அளிக்க டி.ஜி.பி.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
2. தமிழகம் முழுவதும் 39 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: சென்னை போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்
சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்றிரவு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
3. தமிழகம் முழுவதும் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
4. மராட்டிய மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
ஜூலை 31ம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து மராட்டிய மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
5. தமிழகம் முழுவதும் நாளை முதல் ஓட்டல்களில் அமர்ந்து உணவு அருந்தலாம் உணவகங்கள் தயாராகின்றன
தமிழகம் முழுவதும் நாளை (8-ந் தேதி) முதல் ஓட்டல்களில் அமர்ந்து உணவு அருந்தலாம். எனவே அதற்கேற்ப உணவகங்கள் தயாராகின்றன.