மாநில செய்திகள்

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் சாவு: காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை தேவை - டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் + "||" + Father-son death in the saththankulam There is a need for serious action against the police Emphasis of Dr. Anbumani Ramadas

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் சாவு: காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை தேவை - டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் சாவு: காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை தேவை - டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் சாவு விவகாரத்தில் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை தேவை என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை, 

இது குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

சாத்தான்குளம் காவல்நிலைய மரணங்கள் மன்னிக்க முடியாதவை. மனிதத் தன்மையற்றவை. அதற்கு காரணமானவர்களுக்கு சட்டப்படி மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். 

மனித உரிமையை மீற நினைப்போரை எச்சரிக்கும் பாடமாக அமைய வேண்டும். சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இறப்புக்கு காரணமானவர்கள் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது. உடனடியாக அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்து வழக்கையும், குற்றவாளிகளையும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உயிரோடு விளையாட வேண்டாம்: ஊரடங்கை மதித்து வீட்டிலேயே இருங்கள் - இளைஞர்களுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவுரை
உயிரோடு விளையாட வேண்டாம், ஊரடங்கை மதித்து வீட்டிலேயே இருங்கள் என்று இளைஞர்களுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவுரை கூறியுள்ளார்.