மாநில செய்திகள்

சாத்தான்குளம் டிஎஸ்பியாக ராமநாதன் நியமனம் - டிஜிபி திரிபாதி உத்தரவு + "||" + Ramanathan appointed as DSP of sathankulam - DGP Tripathi orders

சாத்தான்குளம் டிஎஸ்பியாக ராமநாதன் நியமனம் - டிஜிபி திரிபாதி உத்தரவு

சாத்தான்குளம் டிஎஸ்பியாக ராமநாதன் நியமனம் - டிஜிபி திரிபாதி உத்தரவு
சாத்தான்குளம் டிஎஸ்பியாக ராமநாதனை நியமனம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, 

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணம் அடைந்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கில் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தாக்கல் செய்த அறிக்கை பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சாத்தான்குளம் டிஎஸ்பியாக ராமநாதனை நியமித்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஏடிஎஸ்பி பார்த்திபன், புதுக்கோட்டை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் ஏடிஎஸ்பி குமார் நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.