மாநில செய்திகள்

முதலமைச்சர் பழனிசாமி பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார் - மு.க.ஸ்டாலின் அறிக்கை + "||" + Chief Minister Palanisamy loses moral right to stay in office - MK Stalin report

முதலமைச்சர் பழனிசாமி பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார் - மு.க.ஸ்டாலின் அறிக்கை

முதலமைச்சர் பழனிசாமி பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார் - மு.க.ஸ்டாலின் அறிக்கை
முதலமைச்சர் பழனிசாமி பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சாத்தான்குளம் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை கைது செய்து, கொலையை மறைக்க துணை போன அனைவரையும் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சி.பி.சி.ஐ.டி போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு, அந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதற்கட்ட நீதி என்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


ஒரு நீதித்துறை நடுவருக்கே காவல் நிலையத்தில் இந்த கொடுமை என்றால், ஜெயராஜையும், பென்னிக்ஸையும் அந்தக் காவல் நிலையத்தில் வைத்து எப்படியெல்லாம்  கொடுமை படுத்தியிருப்பார்கள் என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் ஒரு காவல் நிலையத்தையே நிர்வகிக்க முடியாமல் உண்மையை மறைத்த முதலமைச்சர் பழனிசாமி, பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
2. அத்திக்கடவில் இருந்து அவிநாசி வரை நீரேற்று முறையில் தண்ணீர் கொண்டு செல்ல திட்டம் - முதலமைச்சர் பழனிசாமி
அத்திக்கடவில் இருந்து அவிநாசி வரை நீரேற்று முறையில் தண்ணீர் கொண்டு செல்ல திட்டம் உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
3. கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் தமிழகத்தில் தான் அதிகம் - முதலமைச்சர் பழனிசாமி
கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் தமிழகத்தில் தான் அதிகம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
4. +2 விடைத்தாள் திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்கு
+2 விடைத்தாள் திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்கு அளிக்கப்படுகிறது என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
5. தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.