சாத்தான்குளம் தந்தை- மகன் மரண வழக்கு: எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது


சாத்தான்குளம் தந்தை- மகன் மரண வழக்கு:  எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது
x
தினத்தந்தி 2 July 2020 6:49 AM IST (Updated: 2 July 2020 7:15 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் தந்தை- மகன் மரண விவகாரத்தில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன்,காவலர் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட்டுள்ளனர்.

தூத்துக்குடி,

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர். 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் எஸ்.ஐ.யாக பணியாற்றிய ரகு கணேஷை நேற்று இரவு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில்,  எஸ்.ஐ பாலகிருஷ்ணன், காவலர்  முத்துராஜ் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். நள்ளிரவு முழுவதும் நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் இருவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். 

Next Story