சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக உயிரிழந்த பென்னிக்ஸின் நண்பர்கள் ஆஜர்
சாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது.
தூத்துக்குடி,
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் போலீசாரின் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இது தொடர்பாக, மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ் ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரை அவர்கள் அதிரடியாக கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இன்னும் ஒரு சில தினங்களில் காவலர்களை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்கும் எனத்தெரிகிறது. தந்தை மகன் உயிரிழந்தது தொடர்பாக தொடர்ந்து சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உயிரிழந்த பென்னிக்சின் நண்பர்கள் ஐந்து பேர், விசாரணைக்காக சிபிசிஐடி முன் ஆஜராகியுள்ளனர்.

Related Tags :
Next Story