மாநில செய்திகள்

சாத்தான்குளம் தந்தை,மகன் உயிரிழப்பு விவகாரம் : கைதான காவலர்களில் 3 பேர் மதுரை சிறைக்கு மாற்றம் + "||" + Sathankulam Father son died case; Three arrested cops transferred to Madurai jail

சாத்தான்குளம் தந்தை,மகன் உயிரிழப்பு விவகாரம் : கைதான காவலர்களில் 3 பேர் மதுரை சிறைக்கு மாற்றம்

சாத்தான்குளம் தந்தை,மகன் உயிரிழப்பு விவகாரம் : கைதான  காவலர்களில்  3 பேர் மதுரை சிறைக்கு மாற்றம்
சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை,

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறை தாக்கியதில் தந்தை மகன் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும்  காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மேலும் 5 காவலர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில், உதவி ஆய்வாளர் பால்த்துரை, மற்றும் காவலர் தாமஸ் ஆகியோருக்கு உடல் நல குறைபாடு இருந்ததால், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செல்லத்துரை, சாமத்துரை, வெயிலு முத்து ஆகியோர்  குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு 14 நாட்கள் காவல் பிறபிக்கப்பட்டதை தொடர்ந்து மூன்று காவலர்களும் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த  நிலையில், இந்த காவலர்கள் மூன்று பேரும் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களால் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: பென்னிக்ஸ் நண்பர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை வாக்குமூலத்தை பதிவு செய்தனர்
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக, பென்னிக்சின் நண்பர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
2. சாத்தான்குளம் சம்பவம்:ஜெயராஜ், பென்னிக்ஸ் பிரேத பரிசோதனை வீடியோ வெளியானதா?‘வாட்ஸ்-அப்’பில் பரவும் காட்சிகளால் பரபரப்பு
சாத்தான்குளம் சம்பவத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் பிரேத பரிசோதனை வீடியோ வெளியானதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
3. ஜெயராஜின் மகளுக்கு இளநிலை உதவியாளர் பணி: ஆணையை எடப்பாடி பழனிசாமி நேரில் வழங்கினார்
சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்த சம்பவத்தில், ஜெயராஜின் மகளுக்கு இளநிலை உதவியாளர் பணி நியமனத்திற்கான ஆணையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
4. சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் இறந்ததாக வழக்கு: மகேந்திரனின் உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை வாக்குமூலத்தை பதிவு செய்தனர்
சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் வாலிபர் மகேந்திரன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, அவரது உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
5. சாத்தான்குளம் சம்பவம்: சிறுபான்மையினர் நல ஆணையம் தூத்துக்குடி கலெக்டருக்கு நோட்டீஸ் - தலைவர் ஜான் மகேந்திரன் பேட்டி
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிறுபான்மையினர் நல ஆணையம் தூத்துக்குடி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு இருப்பதாக ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன் தெரிவித்தார்.