திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்ப வேண்டாம்" - அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்


திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்ப வேண்டாம் - அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்
x
தினத்தந்தி 14 July 2020 7:29 AM IST (Updated: 14 July 2020 7:29 AM IST)
t-max-icont-min-icon

"திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்ப வேண்டாம்" - அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சென்னை

திருப்போரூர் சம்பவத்தை, எம்.எல்.ஏ. இதயவர்மன் தனது சொந்த நலனுக்காக செய்தது போல அமைச்சர் ஜெயக்குமார் சித்தரிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.  கோயில் நிலம் தனியாருக்கு விற்கப்படுவதை தடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ சென்ற நிலையில், 50க்கும் மேற்பட்ட ரவுடிகளை காவல்துறை அனுமதித்தது எப்படி? என கேள்வி எழுப்பி உள்ளார். 

நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர், அ.தி.மு.க. பிரமுகரின் பினாமி என்பதை மறைத்துவிட்டு, ஜெயக்குமார் திசை திருப்பும் வகையில் பேசுவதாக கூறியுள்ளார். திமுக எம்.எல்.ஏ நியாயத்தை நிலைநாட்டுவார் என நம்பிக்கை உள்ளதாகவும், உண்மை குற்றவாளிகளை தப்பவைக்கும் முயற்சியை முறியடிப்போம் என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

Next Story