மதுரை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
மதுரை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
சென்னை
மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 8,103ஆக உயர்ந்து உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மேலும் 145 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,237ஆக உயர்ந்து உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இன்று மேலும் 93 பேருக்கு கொரோனா தொற்றுஏறபட்டு உள்ளது. இதனால் பாதிப்பு 2,438ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 1,142 பேர் குணமடைந்துள்ளனர்; 11 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 187 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தென்காசியில் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000-த்தை கடந்துள்ளது.
Related Tags :
Next Story