மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை + "||" + The Chief Minister again consulted with the Medical Expert Committee today
மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் சென்னையில் தான் முதலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது தற்போது பிற மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த கொரோனா மீண்டும் வீரியம் பெற தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் கொரோனா நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனையில் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா?, தளர்த்துவதா? என்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது தொடர்பாக மருத்துவக்குழு பரிந்துரை வழங்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வரும் 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் வரும் 29 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.