மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை + "||" + Liquor sales for Rs 189 crore across Tamil Nadu in one day yesterday

தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை

தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை
தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சென்னை, 

இன்று முழு ஊரடங்கு நடைபெறுவதால், நேற்று (சனிக்கிழமை) மது விற்பனை அதிகமாக நடைபெற்றுள்ளது. நேற்று மதுபானக் கடைகளில் கூட்டம் அலை மோதியது. அந்த வகையில் நேற்று மட்டும் தமிழகத்தில் 188 கோடியே 86 லட்சம் ரூபாய்க்கு மதுமானம் விற்பனை நடந்துள்ளது. 

அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 44 கோடியே 85 லட்சத்துக்கும், திருச்சி மாவட்டத்தில் 42 கோடியே 72 லட்சத்துக்கும், சேலம் மாவட்டத்தில் 40 கோடியே 70 லட்சத்துக்கும், சென்னையில் 21 கோடியே 69 லட்சத்துக்கும், கோவையில் 38 கோடியே 90 லட்சத்துக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த வார சனிக்கிழமை மட்டும் 177 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த வார சனிக்கிழமை( நேற்று) 188 கோடியே 86 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
பஞ்சாயத்து யூனியன் அளவில் குழுவை அமைத்து, தமிழகம் முழுவதும் உள்ள கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
2. தமிழகம் முழுவதும் பரவலாக மழை - கோடை வெப்பம் சற்று தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
தமிழகம் முழுவதும் பரவலாக இன்று மழை பெய்தது இதனால் கோடை வெப்பம் சற்று தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
3. தமிழகம் முழுவதும் கடந்த 10 மாதமாக நிறுத்தப்பட்ட 600 குளிர்சாதன பஸ்களை மீண்டும் இயக்க திட்டம்
குளிர்சாதன வசதியுள்ள அரசு பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4. “தமிழகம் முழுவதும் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்வார்” - தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ் பேட்டி
தமிழகம் முழுவதும் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்வார் என தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.
5. ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.2,500 வினியோகம் தொடங்கியது - மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்றனர்
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 வினியோகிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. ரொக்கப்பணத்துடன், பொங்கல் பரிசு தொகுப்பை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்றனர்.