ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட உள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து


ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட உள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து
x
தினத்தந்தி 4 Aug 2020 2:18 PM GMT (Updated: 2020-08-04T19:48:29+05:30)

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட உள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரித்துள்ளார்.

சென்னை, 

ராமபிரான் பிறந்த இடமான உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பகல் 12.15 மணியளவில் ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். 

இந்நிலையில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட உள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரித்துள்ளார். மேலும் அயோத்தியில் நாளை ராமர் கோயில் பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் என்றும் ராமர் கோயில் கட்டுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டதற்கு மனமார்ந்த பாராட்டு என்றும் தெரிவித்துள்ளார்.  

மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என 1992-ல் ஜெயலலிதா பேசியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். 


Next Story