தமிழக காவல்துறையில் 15 பேருக்கு முதல்-அமைச்சர் விருது: சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு அறிவிப்பு + "||" + First Minister Award for 15 persons in the Tamil Nadu Police: Government announcement on the eve of Independence Day
தமிழக காவல்துறையில் 15 பேருக்கு முதல்-அமைச்சர் விருது: சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு அறிவிப்பு
தமிழக காவல்துறையில் சிறந்த சேவை, புலனாய்வு பணிக்காக 15 பேருக்கு முதல்-அமைச்சர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழக காவல்துறையில் சிறந்த சேவை, புலனாய்வு பணிக்காக 15 பேருக்கு முதல்-அமைச்சர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு 2020-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்-அமைச்சரின் காவல் பதக்கம் வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
இந்த பதக்கம் பெறுவோர்கள் பெயர், பதவி விவரம் வருமாறு:-
* டேவிட்சன் தேவாசீர்வாதம்- கூடுதல் டி.ஜி.பி., தொழில் நுட்பப் பணிகள், சென்னை.
* கி.சங்கர்- ஐ.ஜி., சி.பி.சி.ஐ.டி., சென்னை.
* ச.சரவணன்- துணை போலீஸ் கமிஷனர், சட்டம்-ஒழுங்கு, திருநெல்வேலி மாநகரம்.
* டாக்டர் ச.தீபா கணிகர்- போலீஸ் சூப்பிரண்டு, சேலம் மாவட்டம்.
* பி.ஜெகன்நாத்- தலைமை காவலர், வேலைவாய்ப்பு மோசடி, மத்திய குற்றப்பிரிவு, சென்னை.
இதே போன்று புலன் விசாரணை பணியில் மிகச்சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணி புரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு 2020-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கங்களை வழங்கிட, முதல்-அமைச்சர் ஆணையிட்டு உள்ளார்.
இந்த பதக்கம் பெறுவோர்கள் விவரம் வருமாறு:-
* ஜி.நாகஜோதி- துணை போலீஸ் கமிஷனர், மத்திய குற்றப்பிரிவு, சென்னை.
* இரா.குமரேசன்- துணை போலீஸ் சூப்பிரண்டு, ‘கியூ’ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.
* தி.சரவணன்- உதவி போலீஸ் கமிஷனர், வடக்கு சரகம்(குற்றம்), சேலம் மாநகரம்.
* எஸ்.கே.துரை பாண்டியன்- துணை போலீஸ் சூப்பிரண்டு, காட்பாடி உட்கோட்டம், வேலூர் மாவட்டம்.
* பி.விஜயலட்சுமி- போலீஸ் இன்ஸ்பெக்டர், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு, திருநெல்வேலி.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும் பெறுவார்கள். மேற்கண்ட விருதுகள், முதல்- அமைச்சரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.