நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்


நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 15 Aug 2020 8:33 AM GMT (Updated: 15 Aug 2020 8:33 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடலோரப் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரியில் ஒரு சில இடங்களில் கனமழையும், சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும்” என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று மற்றும் நாளை இரு தினங்களும் மகாராஷ்டிரா, குஜராத், கோவாவை ஒட்டிய கடலோர பகுதிகளிலும், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா கடலோரப் பகுதிகளிலும் பலத்த காற்று சுமார் 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story