மாநில செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்-சீமான் + "||" + Seeman says he and his party will contest upcoming Assembly election in TN

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்-சீமான்

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்-சீமான்
சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை,

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் தமிழகம் முழுவதும் அவரவர் வீடுகளின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் தனது வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், “  இந்தி, இந்தியா என்ற கட்டமைப்பிற்காக திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்

இந்தியை போல் தமிழையும் நாடெங்கும் படிக்க சொல்வார்களா?  இந்தி வந்தால் பிளவு வரும் . இந்தி, சமஸ்கிருதத்தை படிக்கச் சொல்பவர்கள் தமிழை படிக்கச் சொல்ல மறுப்பது ஏன்? சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும், நானும் போட்டியிடுவேன்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதி
உடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2. நீட் விவகாரத்தில் அவருடைய கருத்து ஏற்புடையது நடிகர் சூர்யாவுக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும் சீமான் பேட்டி
நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்து ஏற்புடையது. அவருக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
3. ஊரடங்கு விதிகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சீமான் மீது வழக்குப்பதிவு
ஊரடங்கு விதிகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. "முப்பாட்டன் முருகனின் தனித்தன்மை ஒருபோதும் குன்றாது" - சீமான்
உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் எத்தகைய இழிபரப்புரையாலும் குன்றிவிடாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.