மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு; சென்னையில் 11-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது + "||" + The whole of Tamil Nadu today is a complete curfew without relaxation; It is observed for the 11th time in Chennai

தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு; சென்னையில் 11-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது

தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு; சென்னையில் 11-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது
தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
சென்னை,

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், கடந்த ஜூலை மாதம் முதல் ஊரடங்கில் படிப்படியாக சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. இதனால் நாடு முழுவதும் சில தொழில் நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் செயல்படத்தொடங்கின.


ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்ட பிறகு கொரோனாவின் தாக்கம் சில இடங்களில் அதிகரித்து காணப்பட்டது. தமிழகத்திலும் அதுபோல் கொரோனா தொற்று நாளுக்கு, நாள் உயர்ந்து வந்தது. இதையடுத்து கடந்த ஜூலை மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்தது.

அதன்படி, ஜூலை மாதத்தில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடைப்பிடிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக ஆகஸ்டு மாதத்திலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு தெரிவித்தது. அதன்படி, முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் 11-வது முறையாகவும், பிற மாவட்டங்களில் 9-வது முறையாகவும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளை தவிர, பிற தேவைகளுக்காக வெளியே வருபவர்களை கண்காணிக்க தமிழகம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர்.

இதுவரை ஊரடங்கில் அரசு விதித்திருந்த விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக9 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்கும், சுமார் 6 லட்சத்து 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே அவசிய தேவைகளின்றி இன்று வெளியில் வருபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வதோடு, அவர்களுடைய வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்து இருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
தமிழகம் முழுவதும் மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2. தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் ‘மினி கிளினிக்’ - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
பொதுமக்களுக்கு அன்றாடம் ஏற்படும் நோயை குணப்படுத்த தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் ‘மினி கிளினிக்’ அமைக்க திட்டமிட்டுள்ளதாக தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
3. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் - 2 மணி நேரம் மதுக்கடைகள் அடைப்பு
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது 2 மணி நேரம் மதுக்கடைகள் அடைக்கப்பட்டதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
4. தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு 154 இடங்களில் யோகா சிகிச்சை
தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு 154 இடங்களில் யோகா சிகிச்சை அளிக்கப்படுகிறது.
5. தமிழகம் முழுவதும் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் - இந்து முன்னணி அறிவிப்பால் பரபரப்பு
தமிழகம் முழுவதும் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.