உடல் வெப்பம் அதிகமாக இருந்ததால ‘என்னை ½ மணி நேரம் மட்டும் தேர்வு எழுத அனுமதித்தனர்- வியாசர்பாடி மாணவி குற்றச்சாட்டு
சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியை சேர்ந்தவர் நிவேதிதா (வயது 18). இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதினார்.
சென்னை,
சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியை சேர்ந்தவர் நிவேதிதா (வயது 18). இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதினார். தேர்வு முடிந்த உடன் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், எனது உடல் வெப்பநிலை அதிகமாக இருந்ததால் என்னை ½ மணி நேரம் மட்டும் தேர்வு எழுத அனுமதித்தனர். எனவே நான் இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய உள்ளேன் என்று தெரிவித்தார்.
ஆனால் இவருடைய குற்றச்சாட்டை அந்த தேர்வு மையத்தின் அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்தனர். அவரை தேர்வு எழுதுவதற்கு முழுமையாக அனுமதித்தோம் என்று தெரிவித்தனர். அதே நேரத்தில் தங்களிடம் எந்த புகாரும் வரவில்லை என்று கீழ்ப்பாக்கம் போலீசார் தெரிவித்தனர். நீட் தேர்வு தொடர்பாக யாரும் புகார் தெரிவிக்க விரும்பினால் டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமைக்கு மட்டுமே அளிக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story