சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் பாட வேளைகள் குறைப்பு ரத்து - டாக்டர் ராமதாஸ் வரவேற்பு


சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் பாட வேளைகள் குறைப்பு ரத்து - டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
x
தினத்தந்தி 16 Sep 2020 3:52 AM GMT (Updated: 16 Sep 2020 3:52 AM GMT)

சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் பாட வேளைகள் குறைப்பு ரத்து செய்யப்பட்டதற்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தன்னுடைய ‘டுவிட்டர்’ பதிவில் கூறி இருப்பதாவது:-

சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் பாட வேளைகள் குறைப்பு ரத்துசெய்யப்படுகிறது. ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும் என்று சென்னை பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. பா.ம.க. வின் கோரிக்கையை ஏற்று முடிவை மாற்றிக்கொண்ட சென்னை பல்கலைக்கழகத்துக்கு பாராட்டுகள்.

தமிழ் மொழி தாய்க்கு இணையானது. பல்கலைக்கழகங்கள் எத்தனை புதுமைகளை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தாயை எப்படி ஒதுக்கிவைக்க முடியாதோ?, அதேபோல் கல்வித்திட்டத்தில் தமிழ் மொழியை ஒதுக்கிவைக்கக்கூடாது; ஒதுக்கிவைக்க முடியாது என்பதை பல்கலைக்கழகங்கள் உணரவேண்டும்.

கல்லூரி மாணவர்களின் ஆங்கிலத்திறனை அதிகரிக்கும் பல்கலைக்கழகங்களின் முயற்சி வரவேற்கத்தக்கதுதான். அதற்கான கூடுதல் பாடவேளைகளை உருவாக்கி ஆங்கிலத்திறன் வகுப்புகளை பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் நடத்தவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

Next Story