மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்- சென்னையில் நாளை நடக்கிறது
திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததற்கு இடையே ஏற்கனவே 2 முறை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில், கொரோனா நிவாரணம், நீட் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டன. தற்போது, 3-வது முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்திலேயே நாளை (திங்கட்கிழமை) அனைத்து கட்சி கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கிறது.
இது தொடர்பாக, தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 21-ந் தேதி (நாளை) திங்கட்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். கூட்டத்தில், விவசாயிகளுக்கு விரோதமாக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள 3 சட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story