மாநில செய்திகள்

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் + "||" + Sathankulam father-son murder case: CBI files chargesheet

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்
2 வழக்குகளில், அதிகாரிகள் உள்பட 9 காவல் அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதான போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் இறந்ததால், மற்ற 9 பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அவ்வப்போது சாத்தான்குளத்துக்கும், கோவில்பட்டிக்கும் சென்று விசாரணை நடத்தி சென்றனர். தற்போது இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 2 வழக்குகளில், அதிகாரிகள் உள்பட 9 காவல்  அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருப்பதாக  குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் - வழக்குப்பதிவு செய்தது சிபிஐ
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
2. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ நாளை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ நாளை பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
3. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துக்கு விஷம் காரணமல்ல - எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துக்கு விஷம் காரணமல்ல என எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு தெரிவித்து உள்ளது.
4. நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு: நடிகை ரியாவிடம் 4-வது நாளாக விசாரணை நடத்த சிபிஐ திட்டம்
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் நடிகை ரியாவிடம் 4-வது நாளாக விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.
5. சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணையை மும்பைக்கு மாற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் ரியா சக்ரபோர்த்தி மனு
சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணையை மும்பைக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ரியா சக்ரபோர்த்தி மனு தாக்கல் செய்துள்ளார்.