ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் நாளை துவக்கம்


ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் நாளை துவக்கம்
x
தினத்தந்தி 30 Sep 2020 6:53 AM GMT (Updated: 2020-09-30T12:23:40+05:30)

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை துவக்கி வைக்கிறார்.

சென்னை,

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் வார்டு அல்லது கிராமத்திற்கு உட்பட்ட ரேஷன் கடைகள் உட்பட, வேறு எந்த பகுதியில் உள்ள கடைகளிலும் பொருட்கள் வாங்கலாம்.

மேலும் பிற மாநில கார்டுதாரர்களும் தமிழக ரேஷன் கடைகளில், கைரேகையை பதிவு செய்து, அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியும். ரேஷனில், 'பயோமெட்ரிக்' எனப்படும், கைரேகை கருவியைப் பொருத்தும் பணியில் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Next Story