தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 2021ம் ஆண்டு நடைபெற வேண்டிய சூழ்நிலையில் அதனை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன.
தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் நாடாளுமன்ற எம்.பி.யான டி.ஆர்.பாலு அறிவித்து உள்ளார்.
இந்த கூட்டத்தில், கூட்டணி கட்சிகள் பற்றி ஆலோசனை மேற்கொள்வது, தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் மற்றும் பிரசார பணிகள் உள்ளிட்ட தேர்தலை எதிர்கொள்வது பற்றி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story