மாநில செய்திகள்

வாணியம்பாடி அருகே பரபரப்பு -தி.மு.க. கிளை செயலாளர் மீது துப்பாக்கி சூடு + "||" + gun fire at DMK cadre in vaniyambadi

வாணியம்பாடி அருகே பரபரப்பு -தி.மு.க. கிளை செயலாளர் மீது துப்பாக்கி சூடு

வாணியம்பாடி அருகே பரபரப்பு -தி.மு.க. கிளை செயலாளர் மீது துப்பாக்கி சூடு
வாணியம்பாடி அருகே தி.மு.க. கிளை செயலாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. செல்போனில் குண்டு பாய்ந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
வாணியம்பாடி, 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 50). அப்பகுதி தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார். வேலாயுதம் கடந்த உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து, அதே பகுதியைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் போட்டியிட்டார். அப்போது இருந்தே இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலாயுதம் தனது மோட்டார் சைக்கிளில் திம்மாம்பேட்டைக்கு சென்று விட்டு, இரவு 8 மணியளவில் வீடு திரும்பினார். மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் செல்ல முயன்றபோது, அவரது வீட்டுக்கு அருகில் பதுங்கியிருந்த மர்மநபர் அவரை நோக்கி திடீரென நாட்டுத்துப்பாக்கியால் சுட்டார்.

இதில் அவரது கழுத்து மற்றும் வயிறு பகுதியில் குண்டு பாய்ந்தது. மார்பை நோக்கி சீறிப்பாய்ந்த இரு குண்டுகள் அவருடைய சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனில் பட்டதால், மார்பு பகுதிக்குச் செல்லவில்லை. இதனால் அவர் உயிர் தப்பினார். துப்பாக்கியால் சுட்ட மர்மநபரும், அவருக்கு துணையாக வந்த மற்றொருவரும் தப்பியோடி விட்டனர்.

இந்த நிலையில், காயம் அடைந்த வேலாயுதம் முதலில் வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நேற்று காலை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திம்மாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தி.மு.க. கிளை செயலாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. கொச்சைப்படுத்தி சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாவிட்டால் மாபெரும் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை
கொச்சைப்படுத்தி சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாவிட்டால் திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறி உள்ளார்.
2. திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவேன் - மு.க ஸ்டாலின்
திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவேன் என மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
3. நைஜீரியாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் போலீசாரின் அத்துமீறல்களுக்கு எதிராக 2 வாரங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
4. இன்று நடப்பது ஆட்சியல்ல வீழ்ச்சி; எப்போது யார் காலை வாருவார்கள் என்ற பயத்திலேயே ஆட்சி ஓடுகிறது - மு.க.ஸ்டாலின்
இன்று நடப்பது ஆட்சியல்ல வீழ்ச்சி; எப்போது யார் காலை வாருவார்கள் என்ற பயத்திலேயே ஆட்சி ஓடுகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
5. கிராமங்கள் வளர்ச்சி பெற்றால்தான் நாடு செழிப்பாக இருக்க முடியும்- மு.க ஸ்டாலின்
அதிமுக செயற்குழுவில் வராத கொரோனா, கிராம சபை மூலம் வந்துவிடுமா? என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.