இந்திய தேர்தல் ஆணையருடன், சத்யாபிரதா சாஹூ ஆலோசனை - வரைவு வாக்காளர் சரிபார்க்கும் பணி குறித்து ஆய்வு + "||" + Satyaprada Sahu consults with Election Commissioner of India - Study on draft voter verification work
இந்திய தேர்தல் ஆணையருடன், சத்யாபிரதா சாஹூ ஆலோசனை - வரைவு வாக்காளர் சரிபார்க்கும் பணி குறித்து ஆய்வு
வரைவு வாக்காளர் சரிபார்க்கும் பணி குறித்து இந்திய தேர்தல் ஆணையருடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு ஆலோசனை நடத்தினார்.
சென்னை,
தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை தொடங்கி உள்ளனர். அதே நேரம் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி, பெயர் சேர்ப்பு, நீக்கம், வரைவு பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் குறித்தும் தலைமை தேர்தல் ஆணையர் கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.