மாநில செய்திகள்

முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் இருவரும் ஒரே விமானத்தில் முதல் பயணம் + "||" + The Chief Minister and the Leader of the Opposition first trip on the same plane

முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் இருவரும் ஒரே விமானத்தில் முதல் பயணம்

முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் இருவரும் ஒரே விமானத்தில் முதல் பயணம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் இருவரும் முதல் முறையாக ஒரே விமானத்தில் பயணம் செய்ய உள்ளனர்.
ஆலந்தூர்,

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடம் அமைந்துள்ளது. இவரது பிறந்தநாள் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந் தேதி தேவர் ஜெயந்தியாக கொண்டாடப்படும்.

அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


அதே விமானத்தில் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினும் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஒரே விமானத்தில் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரும் பயணம் செய்ய இருப்பது இதுவே முதல் முறையாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தனர்.
2. முதலமைச்சரின் தாயார் மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்
முதலமைச்சர் தாயார் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், துணை முதல்வர் ஓ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
3. விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் நாடு திரும்புவது வரவேற்கத்தக்கது - ரஷியா
விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி ரஷியாவுக்குத் திரும்புவது வரவேற்கத்தக்கது என ரஷியா கூறி உள்ளது.
4. ரஷிய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கொடுக்கபட்டது உண்மையே- ஜெர்மனி
நவால்னிக்கு யாரோ விஷம் வைத்துள்ளார்கள். இப்படி நடந்ததற்கு ஏற்கனவே ரஷிய வரலாற்றில் உதாரணங்கள் உள்ளன என ஜெர்மனி கூறி உள்ளது.
5. முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டம் நிறைவு
முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்துள்ளது.