

செம்பட்டு, மே.1-
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நேற்று நடந்த அரசு விழாவில் தமிழகமுதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்துக்கு இரவு 6.30 மணிக்கு காரில் வந்த அவர், இங்கிருந்து 7 மணி அளவில் விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றார். அவருடனஅமைச்சர்அன்பில்மகேஷ்பொய்யாமொழியும் சென்றார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, மாநகர போலீஸ்கமிஷனர்கார்த்திகேயன், மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள்,தி.மு.க.வினரமுதல்-அமைச்சரை வழியனுப்பி வைத்தனர்.