மாநில செய்திகள்

தர்மபுரி அருகே கிணற்றில் விழுந்த யானை வெற்றிகரமாக மீட்பு + "||" + Successful rescue of an elephant that fell into a well near Dharmapuri

தர்மபுரி அருகே கிணற்றில் விழுந்த யானை வெற்றிகரமாக மீட்பு

தர்மபுரி அருகே கிணற்றில் விழுந்த யானை வெற்றிகரமாக மீட்பு
தர்மபுரி அருகே கிணற்றில் விழுந்த யானை 15 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது.
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சபள்ளி சின்னாறு அணையை அடுத்த ஏலகுண்டூர் என்ற இடத்தில் தண்ணீர் இல்லாத கிணற்றில் இன்று அதிகாலையில் பெண் யானை ஒன்று தவறி விழுந்தது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது, 50 அடி ஆழ கிணற்றுக்குள் யானை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்து வனத்துறையினர் 10 பேர் அப்பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் யானையை மீட்கும் பணி சுலபமாக இருக்கவில்லை. எனவே 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

முதலில் யானையை கயிறு கட்டி தூக்கியபோது, கயிறு நழுவி கிணற்றின் பக்கவாட்டில் உள்ள பகுதியில் யானை விழுந்தது. இதனையடுத்து மீண்டும் யானையை கயிறு கட்டி தூக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே மாவட்ட அட்சியர் கார்த்திகா, அப்பகுதிக்கு வந்து மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து சுமார் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, கிணற்றில் விழுந்த யானை வெற்றிகரமாக மீட்கப்பட்டது. மீட்புப் பணிகளின் போது யானையின் உடலில் 2 மயக்க ஊசிகள் செலுத்தப்பட்டன. மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் கிரேன் உதவியுடன் யானை மீட்கப்பட்டது.

யானையை வெற்றிகரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகா வாழ்த்து தெரிவித்தார். யானை தற்போது நலமாக இருப்பதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் யானையின் உடலை பரிசோதனை செய்த பிறகு, காட்டில் விட ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ரூ.3½ கோடியில் மாணவர் விடுதி கட்டும் பணிக்கு பூமி பூஜை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கிவைத்தார்
தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ரூ.3.66 கோடி மதிப்பில் மாணவர் விடுதி கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தார்.
2. தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 112 மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை - அமைச்சர்கள் வழங்கினர்
தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 112 மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணையை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.அன்பழகன் ஆகியோர் வழங்கினர்.
3. தர்மபுரி மாவட்டத்தில் கருப்பு கிரானைட் டெண்டரை இறுதி செய்யக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு
தர்மபுரி மாவட்டத்தில் கருப்பு கிரானைட் எடுப்பதற்கான டெண்டரை இறுதி செய்யக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. தர்மபுரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 முதியவர்கள் சாவு
தர்மபுரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 முதியவர்கள் நேற்று உயிரிழந்தனர்.
5. தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 90.80 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 90.80 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டை விட 1.18 சதவீதம் தேர்ச்சி அதிகரித்து உள்ளது.