கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வரும் 25ஆம் தேதி 2 மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு


கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வரும் 25ஆம் தேதி 2 மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு
x
தினத்தந்தி 22 Nov 2020 8:28 AM GMT (Updated: 22 Nov 2020 8:28 AM GMT)

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் வரும் 25ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் சேர்ந்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று முதலமைச்சர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். 

அந்த வகையில், இதுவரை 31 மாவட்டங்களுக்கு சென்ற முதலமைச்சர் கொரோனா பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, அம்மாவட்டங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டப் பணிகளுக்கும் நிதி அளித்து வருகிறார்.

இந்த நிலையில் வரும் 25ஆம் தேதி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார். இந்த ஆய்வின் போது கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார் மற்றும் புதிய வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் விவசாய அமைப்பினருடனும் முதலமைச்சர் பழனிச்சாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Next Story