மாநில செய்திகள்

மதுரையில் மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection in 3 medical college students in Madurai

மதுரையில் மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று

மதுரையில் மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று
மதுரையில் மாணவர்களை தொடர்ந்து மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை, 

மதுரையில் நேற்று புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 12 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 392 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வந்த 34 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதில் 25 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவால் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 719 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 223 பேர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மதுரையில் நேற்று உயிரிழப்பு இல்லை.

இதுவரை மதுரை அரசு கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவர்களுடன் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று ஒரு மருத்துவ கல்லூரி மாணவி, பாராமெடிக்கல் படிப்பு மாணவிகள் 2 பேர் என மொத்தம் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் 3 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் கனிமொழி 2 ஆம் நாள் பிரசாரம் - நெசவாளர்களை சந்தித்து பேசினார்
செல்லூர் பகுதியில் இயங்கி வரும் தறி கூடத்தை பார்வையிட்ட கனிமொழி, அங்குள்ள தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
2. மதுரையில் 50 ஆண்டு பழமையான கட்டடத்தை மீண்டும் புதுப்பிக்கும் பணியின் போது இடிந்து விழுந்து விபத்து...
மதுரையில் 50 ஆண்டு பழமையான கட்டடத்தை மீண்டும் புதுப்பிக்கும் பணியின் போது இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
3. மதுரையில் டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு; திருமண விழாவில் அசத்திய மணமக்கள்
தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரையில் மொய் எழுதுவது மிகவும் விசேஷம். இந்த மொய் பெறும் பழக்கம் திருமணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா போன்ற குடும்ப விழாக்களில் காலம், காலமாக இருந்து வருகிறது.
4. மதுரையில் இருந்து சென்னை செல்லும் ரெயில்களில் காத்திருப்போர் பட்டியலில் கூட இடம் இல்லை; பயணிகள் கடும் தவிப்பு
தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் காத்திருப்போர் பட்டியலும் முடிந்து முன் பதிவு செய்ய முடியாமல் ரெயில் பெட்டிகள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
5. வாரம் இருமுறை ராமேசுவரத்தில் இருந்து மதுரை, கோவை வழியாக மங்களூருக்கு புதிய ரெயில் - தென்னக ரெயில்வே பரிந்துரை
ராமேசுவரத்தில் இருந்து மதுரை, கோவை வழியாக மங்களூருக்கு வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாக தென்னக ரெயில்வே பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.