தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் + "||" + Chance of heavy rain in Tamil Nadu, Pondicherry and Karaikal tomorrow and the day after tomorrow - Weather Center
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்துவிடும். ஆனால் நடப்பாண்டு வடகிழக்கில் இருந்து தொடர்ந்து காற்று வீசி வருவதால் வடகிழக்கு பருவமழை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் நாளை முதல் வரும் 7ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.