மாநில செய்திகள்

“அரசியலுக்கு வாங்க ரஜினி” - டுவிட்டரில் ட்ரெண்டாகி வரும் ஹேஷ்டேக் + "||" + "Rajini to Come politics" - a trending hashtag on Twitter

“அரசியலுக்கு வாங்க ரஜினி” - டுவிட்டரில் ட்ரெண்டாகி வரும் ஹேஷ்டேக்

“அரசியலுக்கு வாங்க ரஜினி” - டுவிட்டரில் ட்ரெண்டாகி வரும் ஹேஷ்டேக்
அரசியலுக்கு வாங்க ரஜினி என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
சென்னை,  

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். அதற்கான பணிகள் கடந்த டிசம்பரில் தொடங்கப்பட்ட நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஜனவரியில் வெளியாகும் என கூறப்பட்டது. 

ஆனால் இடையே ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து கட்சி தொடங்கும் முடிவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். உடல்நிலை காரணமாக தான் எடுத்த இந்த முடிவை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிய ரஜினிகாந்த், இதற்காக மக்களிடம் மன்னிப்பும் கேட்டார்.

ரஜினியின் அரசியல் வருகைக்காக பல ஆண்டுகளாக காத்துக் கிடந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. 

இந்நிலையில் ரஜினிகாந்தை அரசியலுக்கு வர வலியுறுத்தி, சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே ரசிகர்கள் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, “தலைவா தமிழகம் காக்க வா!”, “உலகை அச்சுறுத்த வா தலைவா, வா தலைவா வா, எங்களை வாழ வைத்த தமிழகத்தை வாழவைக்கவா..! தலைவா வா” என்று முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனைத்தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் #அரசியலுக்கு_வாங்க_ரஜினி என்ற ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பேஸ்புக், டுவிட்டர் நிர்வாகிகளுக்கு பாராளுமன்ற நிலைக்குழு சம்மன்
மத்திய தொழில்நுட்பத்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
2. லடாக் - ஜம்மு காஷ்மீர் வரைபட சர்ச்சையில் டுவிட்டர் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா...?
லடாக் - ஜம்மு காஷ்மீர் வரைபட சர்ச்சையில் டுவிட்டர் மீது இந்திய அரசு அனுப்பி உள்ள நோட்டீசில் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என கேட்டு உள்ளது.
3. சட்டமன்ற தேர்தல்: கூடுதல் சுமை என்று தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்படலாம் - நடிகை குஷ்பு
சட்டமன்ற தேர்தலில் கூடுதல் சுமை என்று தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்படலாம் என நடிகை குஷ்பு கூறி உள்ளார்.