மாநில செய்திகள்

காவல்துறை சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்பு + "||" + Chief Minister Palanisamy participates in the Pongal function held on behalf of the police

காவல்துறை சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்பு

காவல்துறை சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்பு
சென்னை பரங்கிமலை பகுதியில் காவல்துறை சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்றுள்ளார்.
சென்னை,

சென்னை மாநகர காவல்துறையின் சார்பில் பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகயை கொண்டாடினார். 

காவல்துறையைச் சேர்ந்த பல மூத்த அதிகாரிகள் அவர்களின் தமிழக உள்துறை செயலாளர் பிரபாகரன், டி.ஜி.பி. திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் உள்ளிட்ட பலர் தங்கள் குடும்பத்தினருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் கயிறு இழுத்தல், சறுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளும், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களும் உள்ளிட்டவை காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.