தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்தினால் நடவடிக்கை - புதுக்கோட்டை எஸ்.பி. எச்சரிக்கை + "||" + Pudukottai SP Warn the Farmers on UnAutherised Tractor Rally in the District
தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்தினால் நடவடிக்கை - புதுக்கோட்டை எஸ்.பி. எச்சரிக்கை
புதுக்கோட்டையில் தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்தினால் மேட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை:
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 61-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாய சங்க பிரதிநிதிகளும் இடையே 11 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அனைத்துக்கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது.
இதற்கிடையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி விவசாயிகள் சார்பில் டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி டெல்லியில் நடைபெற உள்ளது.
டெல்லியில் நடைபெற உள்ள டிராக்டர் பேரணிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்திலும் 26-ம் தேதி தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்தினால் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார் , ஆனால் விவசாயிகளை சந்திக்க நேரமில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
குற்றம்சாட்டி உள்ளார்.
லதா மங்கேஷ்கர் மற்றும் சச்சின் தேண்டுல்கர் ஆகியோரின் டுவீட்கள் குறித்து அவர்களிடம் விசாரிக்க வேண்டும் என்று தான் ஒருபோதும் கூறவில்லை என்று மராட்டிய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறி உள்ளார்.