விடுதலை ஆகும் சசிகலா 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என தகவல்


விடுதலை ஆகும் சசிகலா 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என தகவல்
x
தினத்தந்தி 27 Jan 2021 3:45 AM GMT (Updated: 27 Jan 2021 3:45 AM GMT)

4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைவதையொட்டி விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்தபடியே சசிகலா இன்று விடுதலை செய்யப்படுகிறார்.

பெங்களூரு,

4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைவதையொட்டி விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்தபடியே சசிகலா இன்று விடுதலை செய்யப்படுகிறார். சிறை அதிகாரிகள் நேரில் வந்து அவரிடம் கையெழுத்து பெறுகிறார்கள்.

இந்தநிலையில், ஊழல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த குற்றவாளிகள், விடுதலையான நாளில் இருந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி தண்டனை அனுபவிக்க தொடங்கிய நாளில் இருந்து சசிகலா 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. 

இதில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை காலம் இன்றுடன் முடிவடைகிறது. நாளை (வியாழக்கிழமை) முதல் 6 ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது. அதே நேரத்தில் கட்சி பதவிகளை வகிக்க எந்த தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story