மாநில செய்திகள்

சசிகலா வருகையால் எங்களுக்கு எந்த பதற்றமும் இல்லை; தினகரன் தான் பதற்றத்தில் உள்ளார் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி + "||" + We have no tension with the arrival of Sasikala Minister Jayakumar

சசிகலா வருகையால் எங்களுக்கு எந்த பதற்றமும் இல்லை; தினகரன் தான் பதற்றத்தில் உள்ளார் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சசிகலா வருகையால் எங்களுக்கு எந்த பதற்றமும் இல்லை; தினகரன் தான் பதற்றத்தில் உள்ளார் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
சசிகலா வருகையால் எங்களுக்கு எந்த பதற்றமும் இல்லை; தினகரன் தான் பதற்றத்தில் உள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார்  செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சசிகலா வருகையால் எங்களுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. நாங்கள், அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா என வளர்க்கப்பட்டவர்கள். 

அதிமுக.,வினருக்கு அச்சம் என்பதே தெரியாது. வெளியே வந்தபின் சசிகலா, தினகரனிடம் கணக்கு கேட்பார் என்பதால் அவர்தான் பதற்றத்தில் இருக்கிறார். அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த சசிகலாவிற்கு அனுமதியில்லை. மீறி பயன்படுத்தினால் சட்டம் தன் கடமையை செய்யும்.

சசிகலா குடும்பத்தின் தலையீடு இல்லாமல் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்பது தான் நோக்கம். திமுக.,வின் 'பி' டீமாக சசிகலாவும், தினகரனும் செயல்படுகின்றனர். 

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எங்களோ டுதான் கடைசி வரை இருப்பார். அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஒற்றுமையுடன் உள்ளோம். 1.5 கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கம் அதிமுக. சில புல்லுருவிகள் செயலால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரும்பேர் கண்டிகை தான்தோன்றீஸ்வரர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம்
பெரும்பேர் கண்டிகை தான்தோன்றீஸ்வரர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம்.
2. காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சசிகலா சாமி தரிசனம்
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.
3. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பேட்டரி காரில் சென்று சசிகலா சாமி தரிசனம் அ.ம.மு.க. வேட்பாளர் சந்திப்பால் பரபரப்பு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பேட்டரி காரில் சென்று சசிகலா சாமி தரிசனம் செய்தார். அ.ம.மு.க. வேட்பாளர் அவரை சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4. ஸ்ரீரங்கத்தில் சசிகலா சுவாமி தரிசனம்
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
5. சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரக் கோரி ஆதரவாளர்கள் தர்ணா போராட்டம்
சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரக் கோரி அவரது ஆதரவாளர்கள் அவரது வீட்டு முன் தர்ணா போராட்டம் நடத்தினர்.