தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்தது


தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்தது
x
தினத்தந்தி 12 Feb 2021 5:57 AM GMT (Updated: 12 Feb 2021 5:57 AM GMT)

இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.4,483-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை,

கடந்த 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட் அறிவிப்பின் போது தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தங்கம் விலை கடந்த 1 ஆம் தேதிக்கு பிறகு தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வந்தது.

நேற்று சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 128 ரூபாய் குறைந்து 36,048-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.35,864-க்கு விற்பனையாகிறது. அதே நேரம் ஒரு கிராம் தங்கம் ரூ.4,483-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Next Story